Home இலங்கைவட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் யாரென 6ம் திகதி தெரியவரும்

வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் யாரென 6ம் திகதி தெரியவரும்

by admin

வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் யார்  என்பது குறித்து  எதிர்வரும்  6ம் திகதி நடைபெறவுள்ள  மாகாண சபை அமர்வின் போது தெரியவருமென அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

மேலும் நேற்றைதினம் தற்போதை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராஜா மற்றும் அதே கட்சியினை சேர்ந்த தவநாதன் ஆகியோருடன் சந்திப்பை  நடத்தியுள்ளதாகவும் இதன் அடிப்படையில் வட மாகாண சபையின் எதிர்க்கட்சியின் தலைவர் யார்  என்பது தெரியவரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மாதம் ஈழ மக்கள் ஐனநாய கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தாவினால் எதிர்க்கட்சித் தலைவர் குறித்த கோரிக்கை உள்ளடங்கிய அறிக்கை மாகாண சபையின் அவைத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More