Home இலங்கைபோக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராதம் அதிகரிக்கப்படாது என ஜனாதிபதி உறுதியளித்தார்?

போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராதம் அதிகரிக்கப்படாது என ஜனாதிபதி உறுதியளித்தார்?

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

போக்குவரத்து விதி மீறல்களுக்கான குறைந்தபட்ச அபராதம் அதிகரிக்கப்படாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்தார் என அகில இலங்கை தனியார்  பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியான்ஜித் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட தரப்பினரின் கருத்துக்களை அறிந்துகொள்ளாது அபராதம் அதிகரிக்கப்படாது எனவும் பஸ் உரிமையாளர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலந்தாலோசித்ததன் பின்னரே அபராத தொகை அதிகரிப்பு குறித்து தீர்மானிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார் எனவும் பேரூந்து உரிமையாளர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கு ஜனாதிபதி விசேட குழுவொன்றை நியமித்துள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More