175
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சிறையில் அடைக்கப்படும் பிரபுக்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவது குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது. இது தொடர்பில் சிறையில் அடைக்கப்படும் பிரபுக்களுடன் தொடர்புகளைப் பேணி வரும் சிறைச்சாலை வைத்தியசாலையின் மருத்துவர் ஒருவர் தொடர்பில் விசாரணை நடத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
சிறைகளில் அடைக்கப்படும் பிரபுக்கள் முக்கிய பிரமுகர்கள் சிறைச்சாலை வைத்தியசாலைகளுக்கு மாற்றப்படுவது குறித்து சந்தேகம் எழுவதாக தெரிவித்துள்ள சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன இது தொடர்பில் அறிக்கை ஒன்று கிடைக்கப் பெற்றுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love