Home இலங்கைகாவல்துறையினர் மீது குற்றம் சுமத்தப்படக்கூடாது – சபாநாயகர்

காவல்துறையினர் மீது குற்றம் சுமத்தப்படக்கூடாது – சபாநாயகர்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

காவல்துறையினர் மீது குற்றம் சுமத்தப்படக் கூடாது என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது இதனைத் தெரிவித்துள்ள அவர் பாராளுமன்ற வீதியில் வாகனங்களுக்கு தடை ஏற்படாத வகையில் போராட்டம் நடத்த கூட்டு எதிர்க்கட்சிக்கு காவல்துறையினர் ஒழுங்குகளை செய்திருந்தனர் எனவும் கூட்டு எதிர்க்கட்சியினர் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வகையில் போராட்டத்தை நடத்தியதாகவும்அவர்  குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றிற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது காவல்துறையினரின் கடமையாகும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திப்பதற்கு ஐந்து பேரை மட்டுமே அனுமதிக்க முடியும் எனவும், அதனை விடவும் அதிகளவான தொகையினரை ஒரே தடவையில் சந்திக்க அனுமதிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே கூட்டு எதிர்க்கட்சியினர் நடத்திய போராட்டத்தை காவல்துறையினர் கலைத்தமை ஏற்றுக்கொள்ளக் கூடியது என அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More