குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜெயலலிதாவின் மறைவு குறித்து இலங்கை பாராளுமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஜெயலலிதாவின் மறைவு பற்றி பாராளுமன்றில் கருத்து வெளியிட்டுள்ளார்.
இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஜெயலலிதா குரல் கொடுத்து வந்தார் என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழர் பிரச்சினைகளுக்காகவும் ஜெயலலிதா குரல் கொடுத்தார் எனவும், தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வுத் திட்டம் வழங்கப்பட வேண்டுமென கோரியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Add Comment