குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல் போன வழக்குடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்கள் தக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றில் இந்த நான்கு சந்தேக நபர்களும் அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
இராணுவ உளவுப் பிரிவினைச் சேர்ந்த கோப்ரல் அனுர ஜயலத், சார்ஜன்ட் ஆர்.எம். பிரியந்த குமார, லெப்டினன் கேணல் குமாரரட்ன மற்றும் லெப்டினன் ரி.ரி. பிரபோதா ஆகியோர் இவ்வாறு மனுக்களை வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளனர்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தாங்கள் கைது செய்யப்பட்டமைக்கு சவால் விடுக்கும் வகையில் இவர்கள் முன்னதாக அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்திருந்தனர். ஏற்கனவே பிணை வழங்கியுள்ளதனால் அடிப்படை உரிமை மீறல் மனுக்களை வாபஸ் பெற்றுக்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.