குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அகதிகள் விவகாரத்தில் கடுமையான நிலைப்பாடு பின்பற்றப்படும் என ஜெர்மன் அதிபர் அன்ஜலா மோர்கல் அறிவித்துள்ளார். மோர்கலின் கன்சர்வேட்டிவ் கட்சி தேர்தலை இலக்கு வைத்து அகதிக் கோரிக்கையாளர் விவகாரம் உள்ளிட்ட சில விடயங்களில் கடுமையான அணுகுமுறைகளை பின்பற்ற உள்ளதாக அறிவித்துள்ளது.
குறிப்பாக கௌரவக் கொலை, இரட்டைக் குடியுரிமை, அகதிகளுக்கான புகலிடம் வழங்குதல், பலவந்த திருமணங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் கடுமையான அணுகுமுறை பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பில் இன்றைய தினம் விசேட தீர்மானமொன்று பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.முஸ்லிம் பெண்கள் முர்கா அணிவதனை தடை செய்வதாக அண்மையில் ஜெர்மன் அதிபர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.தேர்தலை இலக்கு வைத்து சில கடுமையான அறிவிப்புக்களை கட்சி வெளியிட்டு வருவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.