குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். தொலைபேசி அழைப்பு ஒன்று தொடர்பில் இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இந்த சம்பவம் குறித்து ஏற்கனவே அரசியல் சாசனப் பேரவை ஜனாதிபதிக்கு பரிந்துரைகளை அனுப்பி வைத்துள்ளது.
காவல்துறை மா அதிபரை பணி நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது என்ற போதிலும் குற்றப் பிரேரணை ஊடாக அல்லது பதவி விலகுமாறு கோருவதன் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட முடியும் என சுட்டிக்காட்டப்படுகிறது.
சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய மாட்டேன் எனவும் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவிற்கும் தாம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகவும் காவல்துறை மா அதிபர் மேடையில் வைத்து தொலைபேசி அழைப்பு ஒன்றுக்கு பதிலளித்த காட்சி ஊடகங்களில் வெளியிடப்பட்டது.
இதனை அடுத்து காவல்துறை மா அதிபருக்கு எதிராக பல்;வேறு தரப்புக்களிலிருந்தும் விமர்சனங்கள் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
காவல்துறை மா அதிபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி தீர்மானம்
9, 2016 @ 19:45
காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கப்பட உள்ளது. காவல்துறை மா அதிபரின் நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்தி பொருத்தமான நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்க, அரசியல் சாசனசபை தீர்மானித்துள்ளது.
காவல்துறை மா அதிபரின் செயற்பாடு சர்ச்சைக்குரியது என இன்றைய தினம் கூடிய அரசியல் சாசனசபையில் பேசப்பட்டுள்ளது. அண்மையில் ரத்தினபுரி பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் மேடையில் தொலைபேசி அழைப்பு ஒன்றுக்கு பதிலளித்த போது, சந்தேக நபர் ஒருவரை கைது செய்யப் போவதில்லை எனவும், அது குறித்து நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவிற்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை மா அதிபர் தெரிவித்திருந்தார்.
காவல்துறை மா அதிபரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு என்ற காரணத்தினால், காவல்துறை மா அதிபர் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.