Home இலங்கையாழ்.கோண்டாவில் பகுதியில் இ.போ.ச தனியார் சிற்றூர்தி சாரதிகள் மோதல்.

யாழ்.கோண்டாவில் பகுதியில் இ.போ.ச தனியார் சிற்றூர்தி சாரதிகள் மோதல்.

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ்.கோண்டாவில் பகுதியில் இலங்கை போக்குவரத்து சபையினருக்கும் தனியார் சிற்றூர்தி மோதல் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

குறித்த மோதல் சம்பவத்தில் தனியார் சிற்றூர்தி சாரதியான ரவீந்திரன் ரெனோல்ட் எனும் நபர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  தாக்குதலை மேற்கொண்டார் என போக்குவரத்து சபை பேரூந்து சாரதி கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

img_2912
பலாலி வீதி வழியாக புண்ணாலைக்கட்டுவானில் இருந்து யாழ்.நகர் நோக்கி சென்ற கொண்டிருந்த தனியார் சிற்றூர்தியை கோண்டாவில் டிப்போக்கு முன்பாக இன்று காலை போக்குவரத்து சபையினர் வழி மறித்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர் என தெரிய வந்துள்ளது.

img_2919

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More