Home இந்தியாமுன்னாள் தளபதி எஸ்.பி. தியாகி உள்பட 3 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்:-

முன்னாள் தளபதி எஸ்.பி. தியாகி உள்பட 3 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்:-

by admin

ஒகஸ்டா வெஸ்ட்லாண்ட் உலங்குவானூர்தி ஊழல் தொடர்பாக விமானப் படை முன்னாள் தளபதி எஸ்.பி. தியாகி உள்பட 3 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது பிரமுகர்கள் பயணிப்பதற்காக இத்தாலியைச் சேர்ந்த ஒகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனத்திடம் இருந்து 3,600 கோடி ரூபா மதிப்புள்ள உலங்குவானூர்திகளைக் கொள்வனவு செய்த போது இந்த உடன்பாட்டை இறுதி செய்வதற்காக அப்போது விமானப்படை தளபதியாக இருந்த எஸ்.பி.தியாகி லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து கடந்த 2014, ஜனவரி 1-ல் இந்த உடன்பாடு இரத்து செய்யப்பட்டது.

மேலும் ஊழல் குறித்தும் சிபிஐ விசாரணை நடத்தி இடைதரகர்கள் உள்பட பலர் மீது வழக்குப் பதிவு செய்தது. இந்நிலையில் விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி.தியாகியையும் அவரது உறவினர்கள் இருவரையும் நேற்றையதினம் சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More