153
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தற்போதைய தேர்தல் முறைமையில் மாற்றம் செய்யப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஊழல் மோசடிகள் இல்லாத வகையில் தேர்தல் நடத்தப்பட வேண்டியது அவசியமானது எனவும் மாவட்ட அரசியல் முறைமையினால் அரசியல்வாதிகள் வாக்காளர்களை நேரடியாக சந்திக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர் மக்களுக்கு சேவையாற்றுவதற்கு பதிலாக அவர்கள் பிரச்சாரத்திற்காக பெருந்தொகை பணத்தை செலவிட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
விருப்பு வாக்கு முறைமையே நாட்டில் பாரியளவு மோசடிகள் இடம்பெறுவதற்கான காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love