குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரான்ஸில் அவசரகாலச் சட்டம் 7 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பாரிஸில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலினைத் தொடர்ந்து அங்கு அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
எதிர்வரும் 2017ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் திகதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதனைக் கருத்திற் கொண்டு அவசரகாலச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டு பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்ட நிலையில் நேற்றையதினம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இந்த வாக்கெடுப்பில், 288 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததால், தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எதிராக 32 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர்.
பிரான்ஸில் அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படவுள்ளது
Dec 11, 2016 @ 06:32
பிரான்ஸில் அவசரகாலச் சட்டம் நீடிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாரிஸில் தாக்குதல் இடம்பெற்றதனைத் தொடர்ந்து அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. எதிர்வரும் 2017ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் திகதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதனைக் கருத்திற் கொண்டு அவசரகாலச் சட்டம் நீடிக்கப்பட உள்ளது.
அவசரகாலச் சட்டத்தை நீடிக்கும் யோசனை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தாக்குதல் இடம்பெற்றதனைத் தொடர்ந்து நான்கு தடவைகள் அவசரகாலச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.