Home இலங்கைகடுமையான சட்டங்களின் மூலமே வீதி விபத்துக்களை தடுக்க முடியும் – காவல்துறை மா அதிபர்

கடுமையான சட்டங்களின் மூலமே வீதி விபத்துக்களை தடுக்க முடியும் – காவல்துறை மா அதிபர்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கடுமையான சட்டங்களின் மூலமே வீதி விபத்துக்களை தடுக்க முடியும் என காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். காவல்துறை தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ள அவர் கடுமையான அபராதங்களை விதிப்பதன் மூலம் சாரதிகள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதனை குறைக்க முடியும் எனவும் கடுமையான வீதிப் போக்குவரத்து சட்டங்களின் ஊடாகவே வீதி விபத்துக்களின் எண்ணிக்கையை வரையறுக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 25000 ரூபா அபராதம் விதிப்பது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டு வருவதாகவும் இது தொடர்பில் சில பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் இந்த அபராதம் அமுல்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More