Home இலங்கைலோர்ட் நேஸ்பி யாழ் மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

லோர்ட் நேஸ்பி யாழ் மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரித்தானியாவின்   இலங்கைக்கான அனைத்து கட்சி பாராளுமன்ற குழுவின் தலைவர் லோர்ட் நேஸ்பி அவர்கள் இன்றைய தினம்(04)   நா.வேதநாயகன் அவர்களை யாழ் மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

யாழ் மாவட்டத்தின்  அபிவிருத்தி, மக்களின் வாழ்வாதாரம், மீள்குடியேற்றம் மற்றும் பொதுவான விடயங்கள்   தொடர்பில் இச்சந்திப்பின் போது  கலந்துரையாடப்பட்டதாக அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

மேலும் லட்சத்திற்கும் அதிகமான அகதிகள் இந்தியாவில் இருக்கின்றார்கள் எனவும்  தற்போது  இலங்கை வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும்  கலந்துiராடலின் போது தெரிவித்த  அரசாங்க அதிபர் மீள்குடியேற்றம்  N மற்கொள்ளப்பட்டு வருவதாகவும்  அண்மையில் இந்தியாவில் இருந்து 900 குடும்பங்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More