குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஆட்சியைக் கவிழ்ப்பது எவ்வாறெனினும் பாராளுமன்ற ஆசனத்தை தக்க வைத்துக்கொள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ போராட நேரிடும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பிரதமர் பதவியை பெற்றுக் கொள்வதற்காக போட்டியிட்ட மஹிந்த எதிர்காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையேனும் தக்க வைத்துக் கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் விஹாரை காணிகளையும் மக்களின் காணிகளையும் அபகரிக்க நடவடிக்கை எடுக்காது எனவும், வெளிநாட்டவர்களுக்கு பூரண உரிமையுடன் காணிகள் வழங்கப்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸ குருணாகல் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய போதிலும், அவரது ஆட்சிக் காலத்தில் தயட்ட கிருலக் என்ற கண்காட்சியை தவிர வேறு எதனையும் குருணாகல் மக்களுக்காக செய்ததில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.