Home இந்தியாகாந்தி படம் இல்லாமல் வெளியான 2000 ரூபாத்தாள்களை ரிசர்வ் வங்கி திரும்ப பெற்றுள்ளது:-

காந்தி படம் இல்லாமல் வெளியான 2000 ரூபாத்தாள்களை ரிசர்வ் வங்கி திரும்ப பெற்றுள்ளது:-

by admin

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் காந்தி படம் இல்லாமல் வெளியான 2000 ரூபாத்தாள்களை  ரிசர்வ் வங்கி திரும்ப பெற்றுள்ளது. மத்திய அரசு வெளியிடும் புதிய ரூபாய் தாள்கள்  அனைத்திலும் மகாத்மா காந்தி படம் இடம் பெறுகின்ற நிலையில்  புதிய 2 ஆயிரம் ரூபாய் தாள்களிலும் மகாத்மா காந்தி படம் சேர்க்கப்பட்டுள்ளது.

எனினும்  நேற்றைதினம்  மத்திய பிரதேச மாநிலத்தின் சியோப்பூர் மாவட்டத்தில் ஸ்டேட் பாங்க் ஒப் இந்தியா வினியோகம் செய்த புதிய 2 ஆயிரம் ரூபாய் தாள்களில்  மகாத்மா காந்தி படம் இல்லாமல் இருந்தது.

அவை  கள்ள ரூபாய் தாள்களாக இருக்கலாம் என்று சந்தேகம் அடைந்த மக்கள்  அதனை வங்கியில் மீள கையளித்துள்ளனர். அச்சிடும் பணியில் நடந்த தொழில்நுட்ப கோளாறால் காந்தி படம் விடுபட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More