Home இலங்கைஅம்பாந்தோட்டையில் பதட்டம் :

அம்பாந்தோட்டையில் பதட்டம் :

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அம்பாந்தோட்டையில் பதட்டம் நிலவுதாக தெரிவிக்கப்படுகின்றது. அம்பாந்தோட்டை முதலீட்டு ஊக்குவிப்பு வலய திறப்பு நிகழ்வு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று இடம்பெறுகின்ற நிலையில் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அம்பாந்தோட்டை முதலீட்டு ஊக்குவிப்பு வலய பிரதேசத்திற்கு அண்மித்த பகுதியில்  நூற்றுக்கணக்கான தேரர்கள் மற்றும் ஒன்றிணைந்த எதிரணியினர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததுடன், கல்வீச்சுகளையும் மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக காவல்துறையினர்  கண்ணீர்ப்புகை பிரயோகம் நடத்தியுள்ளனர்.

இதனால் இரு காவல்துறையினர்  உட்பட  அறுவர் காயமடைந்துள்ள நிலையில்  அம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அம்பாந்தோட்டையில் ஊர்வலங்கள் அல்லது கூட்டங்களை நடத்த நேற்றையதினம்  நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More