156
இந்தோனேசியாவில் கடந்த வருட இறுதியில், 8 லட்சத்துக்கும் மேற்பட்ட இணையதளங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆபாச தரவுகள் பரப்புகின்ற , தீவிர அரசியல் கருத்துக்களை பரப்புகின்ற அல்லது சட்டவிரோத சூதாட்ட தளங்களாக காணப்பட்ட இணையத்தளங்களே இவ்வாறு தடைசெய்யப்பட்டுள்ளன.
2014ல் இந்தோனேசியா அரசு கடுமையான இணைய சட்டங்களை நடைமுறைப்படுத்தியது. இந்தோனேசிய அரசு எதிர்மறையான கருத்து எனக் கருதும் தரவுகள் இணையத்தில் இருந்து நீக்குவதை இலக்காகக் கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Spread the love