Home இலங்கைகடும்போக்காளர்கள் நாட்டின் எதிர்காலத்திற்கு பாதகத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர் – நிரோசன் பெரேரா

கடும்போக்காளர்கள் நாட்டின் எதிர்காலத்திற்கு பாதகத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர் – நிரோசன் பெரேரா

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கடும்போக்காளர்கள் நாட்டின் எதிர்காலத்திற்கு பாகத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றார்கள் என ராஜாங்க அமைச்சர் நிரோசன் பெரேரா தெரிவித்துள்ளார். அரசியல் நோக்கில், அடிப்படையின்றி குழப்பங்கள் விளைவிப்பதனால் அரசாங்கத்திற்கோ அல்லது தனியொரு கட்சிக்கோ பாதிப்பு கிடையாது எனவும் ஒட்டுமொத்த நாட்டின் எதிர்காலத்தையே பாதிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகப் பொருளாதார சவால்களை வென்றெடுத்து பாரிய அபிவிருத் திட்டங்களை முன்னெடுப்பதே பேண்தகு  இலங்கை என்ற திட்டத்தின் பிரதான நோக்கம் என குறிப்பிட்டுள்ள அவர் பத்து லட்சம் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தி பொருளாதார நலன்களை மக்களுக்கு வழங்க வேண்டுமாயின் நிச்சயமாக ஏற்றுமதி வர்த்தகத்தை மேம்படுத்த வேண்டுமென தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் கடந்த இரண்டு ஆண்டுகளாக பாரியளவில் திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More