Home இலங்கைஜாலிய விக்ரமசூரிய தொடர்ந்தும் தடுத்து வைப்பு

ஜாலிய விக்ரமசூரிய தொடர்ந்தும் தடுத்து வைப்பு

by admin

குளோபல் தமிழ்ச்  செய்தியாளர்


அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 13ம் திகதி வரையில் ஜாலியவை  தொடர்ந்து தடுத்து; வைக்குமாறு  கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்றையதினம்  நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்கத் தூதுவராக கடமையாற்றிய காலத்தில் விக்ரமசூரிய அரச சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அறிவிக்காது நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த போது அண்மையில் விக்ரமசூரிய கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More