Home இலங்கையாழில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் வழங்கப்பட்ட உணவு விசமாகியத்தில் 15 பேர் வைத்திய சாலையில்

யாழில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் வழங்கப்பட்ட உணவு விசமாகியத்தில் 15 பேர் வைத்திய சாலையில்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ் கரணவாய் உப்புகிணற்றடி பகுதியில் உள்ள வீடொன்றில் புதன் கிழமை இரவு  நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தன் போது வழங்கப்பட்ட இரவு உணவு நஞ்சாகியதால் அதனை உட்கொண்ட ஐந்து சிறுவர்கள் உட்பட 15 பேருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டது.

அதனை அடுத்து உடல் நல குறைவுக்கு உள்ளானவர்கள் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அது தொடர்பில் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி தலைமையிலான குழுவினர் பிறந்தநாள் கொண்டாடப்பட்ட வீட்டினை பரிசோதனை செய்த போது சமைக்கப்பட்ட இறைச்சி விசமாகியமை கண்டறியப்பட்டது.

அந்த இறைச்சியினை வல்வெட்டித்துறையில் உள்ள இறைச்சிக்கடையில் தாம் கொள்வனவு செய்ததாக வீட்டார் தெரிவித்துள்ளனர்.  இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி தலைமையிலான குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More