Home இந்தியாதடையை மீறி தமிழகத்தில் பல இடங்களில் ஜல்லிக்கட்டு -15 இளைஞர்கள் கைது

தடையை மீறி தமிழகத்தில் பல இடங்களில் ஜல்லிக்கட்டு -15 இளைஞர்கள் கைது

by admin

பொங்கல் தினத்தை அடுத்த நாளான உழவர் தினமான இன்று தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது.

மதுரை விளாங்குடி, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருவதனால்  அந்தந்தப் பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாகவும்  இதனால் பதற்றம் நிலவி வருவதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும்  திருச்செந்தூர் அருகில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் தடையை மீறி மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது. இதற்காக வாடிவாசல் அமைக்கப்பட்டு காளைகள் அவிழ்த்துவிடப்பட்டு அதனை ஏராளமான இளைஞர்கள் விரட்டிப் பிடித்தனர்.

இதனையடுத்து 15 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.இதனைப் போன்று, திருச்சி, கல்லணை அருகே உத்தமசீலியில் 50 மாடுகளை இளைஞர்கள் அவிழ்த்து விட்டு ஜல்லிக்கட்டை நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More