Home இலங்கைலொத்தர் சீட்டுக்கள் பழைய விலைக்கே விற்பனை செய்யப்படும்

லொத்தர் சீட்டுக்கள் பழைய விலைக்கே விற்பனை செய்யப்படும்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


லொத்தர் சீட்டுக்கள் பழைய விலைக்கே விற்பனை செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வரவு செலவுத் திட்டத்தில் லொத்தர் சீட்டுக்களின் விலைகள் 20 ரூபாவிலிருந்து 30 ரூபாவாக உயர்த்தப்பட்டிருந்தது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவிற்கு அமைய லொத்தர் சீட்டுக்களின் விலைகள் மீளவும் 20 ரூபாவாக்கப்பட்டுள்ளன.

லொத்தர் சீட்டின் விலை உயர்த்தப்பட்டமைக்கு எதிர்ப்பு வெளியிட்டு லொத்தர் சீட்டு விற்பனை முகவர்கள் மற்றும் விற்பனையாளர்கள் போராட்டம் நடத்தியிருந்தனர். இந்த போராட்டத்தை தொடாந்து லொத்தர் சீட்டின் விலை 30 ரூபா என்ற புதிய விலையிலிருந்து 20 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நிதி ராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன விலை குறைப்பு குறித்து அறிவித்துள்ளார்.

விலை ஏற்றத்துடன் லொத்தர் சீட்டு விற்பனை வீழ்;ச்சியடைந்ததுடன், விற்பனையாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More