170
எதிர்வரும் 31-ம் திகதி ஆரம்பமாகவுள்ள பார்வையற்றவர்களுக்கான உலக கோப்பை இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டிகள் பெப்ரவரி மாதம் 12ம் திகதிவரை நடைபெற உள்ளன.
இம்முறை இந்தியா நடத்துகின்ற இந்தப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து, இலங்கை, நியூசிலாந்து, பங்களாதேஸ் , மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் விளையாடுகின்றன.
டெல்லியில் நடைபெறவுள்ள இதன் முதல்;போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இந்திய அணி மோதுகிறது. நடப்பு சம்பியனான இந்திய அணி, கடந்த 2012-ல் நடந்த இறுதி போட்டியில் பாகிஸ்தானை வெற்று கோப்பையை தட்டிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
Spread the love