Home இலங்கைஉண்ணாவிரதம் இருக்க போவதாக வெளியான செய்தி பொய் என்கிறார் அனந்தி சசிதரன்

உண்ணாவிரதம் இருக்க போவதாக வெளியான செய்தி பொய் என்கிறார் அனந்தி சசிதரன்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க போகின்றேன் என சில இணைய தளங்களில் வெளியாகியுள்ள செய்திகள் தவறானவை என வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்து உள்ளார்.

காணாமல் போனவர்கள் தொடர்பில் அரசாங்கம் சரியான பதிலை வழங்காது விடின் அனந்தி சசிதரன் உண்ணாவிரதம் இருக்க போவதாகவும் , எதிர்வரும் 21ம் திகதி அவர் தனது போராட்டத்தை ஆரம்பிக்க போவதாகவும் அறிவித்து உள்ளதாக சில இனையத்தளங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.

இது தொடர்பில் அவரிடம் கேட்ட போது, தான் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக எந்த ஊடகங்களுக்கும் தெரிவிக்கவில்லை எனவும் அந்த செய்தியில் உண்மை இல்லை எனவும் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More