210
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தையிட்டி கிராம மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க நேற்று(21) மாலை பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கிராமத்திற்கு சென்று நிலைமைகளை நேரடியாக அவதானித்தார்.
குறிப்பாக கிராம மக்களின் குல தெய்வமான தையிட்டி பிள்ளையார் ஆலயத்தை பார்வை இட்டதுடன் மக்களின் தேவைகளை கேட்டறிந்து கொண்டார். மேலும் அப்பகுதியில் விவசாய செய்கையில் ஈடுபட்டுள்ளவர்களையும் சந்தித்து அவர்களுக்கான சந்தை வாய்ப்புக்கள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.
Spread the love