Home பிரதான செய்திகள்இரண்டாவது டுவன்ரி20 போட்டியில் இலங்கை வெற்றி

இரண்டாவது டுவன்ரி20 போட்டியில் இலங்கை வெற்றி

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தென் ஆபிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது இருபதுக்கு20 போட்டியில் இலங்கை அணி மூன்று விக்கட்டுகளினால் வெற்றியீட்டியுள்ளது. தென்  ஆபிரிக்காவின் ஜொஹனர்ஸ்பேர்க் வொன்டரஸ் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய  தென் ஆபிரிக்க  அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி  களமிறங்கிய தென் ஆபிரிக்க அணி 19.3 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 113 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது. இதில் ஹெய்னோ குஹன் 29 ஓட்டங்களையும், பர்ஹான் பெஹார்டின் 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் அறிமுக வீரர் லக்ஸான் சந்தகென் 4 விக்கட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.4 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. இதில்  அணித் தலைவர் அன்ஜலோ மெத்யூஸ் ஆட்டமிழக்காது 54 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் தென் ஆபிரக்க வீரர் ஏ.எல். பெலுக்வாயோ  (Phehlukwayo )நான்கு விக்கட்டுகளை வீழ்த்தினார். மூன்று போட்டிகளைக் கொண்ட போட்டித் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றியீட்டி சமனிலை வகிக்கின்றன. போட்டியின் ஆட்ட நாயகனாக இலங்கை அணித்தலைவர் மெத்யூஸ் தெரிவு செய்யப்பட்டார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More