Home உலகம்தெற்கு அமெரிக்கா மாநிலங்களில் சூறாவளியால் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

தெற்கு அமெரிக்கா மாநிலங்களில் சூறாவளியால் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

by admin


அமெரிக்காவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜோர்ஜியா, அலாபாமா, புளோரிடா மற்றும் மிஸிஸிப்பி ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகின்ற நிலையில் குறித்த மாநிலங்களில் நேற்றையதினம் கடும் சூறாவளி தாக்கியது.

இதனால் வீடு மற்றும் கடைகளின் மேற்கூரைகள் அடித்துச் செல்லப்பட்டதுடன் பல பகுதிகளில் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதுடன்  இதன்காரணமாக  18 பேர் உயிரிழந்துள்ளனர்.

முன்னெச்சரிக்கை அறிவிப்பையடுத்து, வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் தற்காலிக முகாம்கள் தங்க வைக்கப்பட்டு நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More