Home உலகம்கம்பிய திறைசேரியில் பாரியளவு பணத்தை காணவில்லை

கம்பிய திறைசேரியில் பாரியளவு பணத்தை காணவில்லை

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


கம்பியா நாட்டின் திறைசேரியில் பாரியளவு பணத்தை காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது. நீண்ட காலம் நாட்டை ஆட்சி செய்த ஜாஜா ஜம்மா ( Yahya Jammeh ) நாட்டை விட்டு வெளியேறியதனைத் தொடர்ந்து இவ்வாறு பணம் காணாமல் போயுள்ளது.

சுமார் 11 மில்லியன் அமெரிக்க டொலர்கள் காணாமல் போயுள்ளதாகவும் இவ்வாறு இந்தப் பணம் காணாமல் போனது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஆட்சியாளர்  ஜாஜா ஜம்மா  நாட்டை விட்டு வெளியேறும் போது கனேடிய சரக்கு விமானத்தில் அதி சொகுசு கார்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் ஏற்றிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த இருபத்து இரண்டு ஆண்டுகளாக கெம்பியாவை ஜாஜா ஜம்மா ஆட்சி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பணம் காணாமல் போன விடயம் குறித்து முன்னாள் அதிபர் ஜாஜா ஜம்மா எவ்வித கருத்தும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More