குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்சவின் ஆதரவாளர் ஒருவர் நீதிமன்றில் குழப்பம் விளைவித்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். நீதிமன்றில் வைத்து குறித்த ஆதராளர் சத்தமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அப்போதைய பிரதி அமைச்சரான லசந்த அழகிய வன்ன மற்றும் அப்போதைய பொறியியல் கூட்டுத்தாபன தலைவர் ஆசு மாரசிங்க ஆகியோரும் கைது செய்யப்பட்டிருக்க வேண்டுமென அந்த ஆதரவாளர் நீதிமன்றில் சத்தமிட்டுள்ளார்.
பாணந்துறை பகுதியைச் சேர்ந்த கம்லகே சுரேஸ் பிரேமலால் என்பவரே இவ்வாறு சத்திமிட்டுள்ளார். நீதிமன்றில் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யுமாறு நீதவான் லங்கா ஜயரட்ன உத்தரவிட்டுள்ளார்.