குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் ராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன, பாராளுமன்றில் எதிர்க்கட்சியினர் அமரும் ஆசன வரிசையில் அமர்ந்து கொண்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தில் ராஜாங்க அமைச்சராக கடமையாற்றியிருந்த பிரியங்கர ஜயரட்ன அண்மையில் ஏற்பட்ட முரண்பாட்டு நிலைமை காரணமாக பதவி விலகியிருந்தார்.
இன்றைய தினம் மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பிலான பாராளுமன்ற விவாதத்தின் போது, பிரியங்கர ஜயரட்ன எதிர்க்கட்சியில் அமர்ந்து கொண்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே உள்ளிட்ட சிலர் பிரியங்கர ஜயரட்னவை பாராளுமன்ற அவைக்குள் அழைத்து வந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.

