மலையகத்தின் 25 பாடசாலைகள் அபிவிருத்தி செய்யும் செயற்திட்டத்தில் 23 கணித விஞ்ஞான பாடசாலைகளுக்கும் ஒரு விளையாட்டு பாடசாலைக்கும் ஒரு நுண்கலை பாடசாலைக்கும் தேவையான 112 மில்லியன் ரூபா பெறுமதியான தளபாடங்கள்¸ விளையாட்டு பொருட்கள்¸ நுன்கலை சாதனங்கள்¸ விஞ்ஞான உபகரணங்கள். ஆகியன கையளிக்கும் தேசிய நிகழ்வு கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தலைமையில் நுவரெலியா பிரதேச செயலகத்தின் ‘ஆச்சரிய’ மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த மலையக பாடசாலை அபிவிருத்தி செயற்திட்டத்திற்கு வரவு செலவு திட்;டத்தில் 250 மில்லியன் ஒதுக்கபட்டுள்ளது. இதில் பாடசாலைகளின் கட்டிட திருத்தம்¸ புதிய கட்டிடங்கள் அமைத்தலுக்கு 138 மில்லியன் ஒதுக்கப்பட்டு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந் நிகழ்விற்கு கல்வி இராஜாங்க அமைச்சர்¸ மலேசிய பிரதமரின் நாட்டின் கல்வி அபிவிருத்தி பணிப்பாளர் இராஜேந்திரன் நாகப்பன். அவருடன் வந்த 09 பேர் அடங்கிய குழு¸ கல்வி அமைச்சின் பெருந்தோட்ட பாடசாலை அபிவிருத்திக்கான பனிப்பளார் திருமதி மகேஸ்வரி சபாரஞ்சன் பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.அரவிந்தகுமார்¸ வேலு குமார்¸ எம்.திலகராஜ் உட்பட மாகாண சபை உறுப்பினர்கள். கல்வி அமைச்சின் அதிகாரிகள்¸ நுவரெலியா கல்வி வலையத்தின் கல்வி அதிகாரிகள் உட்பட 25 பாடசாலைகளின் அதிபர்கள் கலந்து கொண்டார்கள்.