குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கு தீர்ப்பிற்கு எதிரான மேன்முறையீடு மீளவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜினால் இந்த மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை வழக்குத் தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்ட போதும் மேன்முறையீடு செய்த மனுதாரர் அல்லது அவரது சட்டத்தரணி நீதிமன்றில் முன்னிலையாகத் தவறியதனால் அந்த மேன்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டிருந்த நிலையில் மீளவும் இன்றைய தினம் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மேன்முறையீட்டு மனு மார்ச் மாதம் 3ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.