184
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நாவற்குழியில் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான காணியில் சிங்கள மக்களுக்கு வீடமைத்து கொடுக்கும் நோக்குடன் அடிக்கல் நாட்டு வைபவம் நடைபெற்றால் , நிகழ்வு நடக்கும் இடத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்து உள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
நாவற்குழியில் எதிர்வரும் 30ம் திகதி மானிய அடிப்படையில் வீடமைத்து கொடுப்பதற்காக அடிக்கல் நாட்டும் வைபவம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது அவ்வாறு நிகழ்வுகள் நடைபெற்றால் நிகழ்வினை நடக்க விடாது தடுத்து அவ்விடத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்.
நாவற்குழி பகுதியில் தற்போது 10க்கும் குறைவான குடும்பங்களே தற்போது குடியிருக்கின்றார்கள். ஆனால் 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பதிவுகளை மேற்கொண்டு விட்டு தமது சொந்த இடங்களுக்கு சென்று உள்ளனர். அவர்களுக்கும் இங்கே வீடமைத்து கொடுக்கப்படவுள்ளது.
வடக்கில் பல குடும்பங்கள் வீடற்ற நிலையில் இருக்கும் போது தெற்கில் இருந்து வந்து பதிவுகளை மாத்திரம் மேற்கொண்டு விட்டு தமது சொந்த இடங்களுக்கு சென்று வசிக்கும் குடும்பங்களுக்கு யாழில் வீடமைத்து கொடுப்பதனை ஏற்க முடியாது. என தெரிவித்தார்.
Spread the love