குளோபல் தமிழ்ச் செய்திகள்
கூட்டு எதிர்க்கட்சியின் அரசாங்கம் ஆட்சி அமைத்ததன் பின்னர் பேர்பேருவல் ரெசறீஸ் (Perpetual Treasuries ) நிறுவனத்தின் தலைவர் அர்ஜூன் அலோசியஸை கைது செய்யும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
பேர்பேருவல் ரெசறீஸ் நிறுவனத்துடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டதன் காரணமாக ஊழியர் நம்பிக்கை நிதியம் 15 பில்லியன் ரூபா நட்டமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்த ஜனாதிபதி விசாரணைக்குழுவின் அறிக்கை மற்றுமொரு அறிக்கையாக சமர்ப்பிக்கப்படுமே தவிர நடவடிக்கைகள் எடுக்கப்படாது என குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் நெருக்கடிகளை எதிர்நோக்கி வரும் சந்தர்ப்பங்களில் இவ்வாறு விசாரணைகள் குழுக்கள் நிறுவப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.