குளோபல் தமிழ்ச் செய்திகள்
கடந்த ஆண்டில் 2,477 கிலோ கிராம் எடையுடைய போதைப் பொருட்களை சுங்கப் பிரிவினர் மீட்டுள்ளனர். சுங்கப் பிரிவினரால் மீட்கப்பட்ட போதைப் பொருளின் மொத்தப் பெறுமதி 18 ஆயிரத்து 556 மில்லியன் ரூபா என சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சூளானந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
மீட்கப்பட்டவற்றில் 1,230 கிலோ கிராம் கொக்கேய்ன் போதைப் பொருளும், 8.83 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருளும், 5.41 கிலோ கிராம் கஞ்சா போதைப் பொருளும், 1232 கிலோ கிராம் எடையுடைய போதை மாத்திரைகளும் மீட்கப்பட்டுள்ளன.
இதற்கு மேலதிகமாக 49 கிலோ கிராம் எடையுடைய தங்கமும் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.