குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கைக்கு வெளிநாட்டு முதலீடு மிகவும் அவசியமானது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மஹரகமவில் நடைபெற்ற இளைஞர் பாராளுமன்ற அமர்வுகளில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டை விற்பனை செய்வதற்கு எவ்வித முயற்சியும் எடுக்கப்படவில்லை எனவும் இந்த நாட்டிலிருந்து எவரும் நீக்கப்பட மாட்டார்கள் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் முதல் தர வர்த்தகர்களிடம் உதவிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
சரியான வகையில் முதலீடு செய்யப்பட்டால் வெளிநாட்டில் தொழில் வாய்ப்பு பெற்றுச் செல்ல வேண்டிய அவசியமில்லை என குறிப்பிட்டுள்ள பிரதமர் கொழும்பை அபிவிருத்தி செய்வது மட்டும் அரசாங்கத்தின் திட்டமல்ல எனவும் ஹம்பாந்தோட்டையும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.