Home உலகம்குவைத்தில் கொலை வழக்கு தொடர்பில் அரச குடும்பத்தை சேர்ந்த ஒருவர் உட்பட 7 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.

குவைத்தில் கொலை வழக்கு தொடர்பில் அரச குடும்பத்தை சேர்ந்த ஒருவர் உட்பட 7 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.

by admin

குவைத்தில் கொலை வழக்கு  ஒன்று தொடர்பில்  மரண தண்டனை விதிக்கப்பட்ட அரச குடும்பத்தை சேர்ந்த ஒருவர் மற்றும் மூன்று பெண்கள் உள்பட 7 பேர் இன்று தூக்கிலிடப்பட்டுள்ளனர்.

இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் இருவர் குவைத் நாட்டை சேர்ந்தவர்கள் என்பதுடன் ஏனையவர்கள்   எகிப்து ,  பங்களாதேஸ்,  பிலிப்பைன்ஸ், எத்தியோப்பியா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் என குவைத் அரச செய்தி ஸ்தாபனம்  தெரிவித்துள்ளது.

குவைத்தில் கடந்த 2013-ம் ஆண்டுக்கு பின்னர் இன்றுதான் முதன்முறையாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More