Home இலங்கைவெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அலுவலகம் யாழில் திறப்பு.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அலுவலகம் யாழில் திறப்பு.

by admin

குளோபல் தமிழ் செய்தியாளர்

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் அலுவலகம் இன்றைய தினம்(26) யாழ் மாவட்ட செயலகத்தில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நாட்டில் திறக்கப்படும் முதலாவது பிராந்திய அலுவலகம் இதுவாகும். சகல கொன்சியூலர் சேவைகளும் ஒரே இடத்தில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் தவிக்கவிடப்பட்டுள்ள இலங்கையர்களை கொண்டு வருதல், வெளிநாடுகளில் இறந்த உங்களுடைய அன்பிற்கு உரியவர்கள், குடும்ப அங்கத்தவர்களின் பூத உடல்களை திரும்பவும் கொண்டு வருவதற்கு உதவி வழங்குதல், வெளிநாடுகளிலுள்ள எமது தூதரகங்கள் மூலமாக அங்குள்ள இலங்கையர்களுக்கு சட்டஉதவி வழங்குதல்,  வெளிநாடுகளில் தனித்து விடப்படும் இலங்கை மீனவர்களுக்கு உதவி வழங்குதல், விசா நடைமுறைகளுக்கான ஆவணங் களை உண்மையானவை என உறுதிப்படுத்துதல். போன்ற சேவைகளை இங்கே பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More