மெக்ஸிக்கோ எல்லைச் சுவர் திட்டம் உள்ளிட்ட குடியேற்றம் தொடர்பான திட்டங்களில் அமெரிக்க ஜனாதிபதி; டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை அலுவலகத்திற்கு சென்ற டிரம்ப் வேலைகளை ஆரம்பிப்பதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார்.
இந்தநிலையில் தென் பகுதியில் மிகப்பெரிய சுவரை அமைப்பதற்கான பணிகள் விரைவில் ஆரம்பமாக உள்ளதாக வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த திட்டத்தின் படி அமெரிக்கா – மெக்ஸிக்கோ இடையே 3,200 கிலோமீட்டர் நீளத்திற்கு சுவர் அமைக்கப்பட உள்ளது.
எனினும் மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட உத்தரவிட்டமைக்கு மெக்சிகோவில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளதுடன் டொனால்டு டிரம்ப்பை கண்டித்து பல்வேறு நகரங்களிலும் போராட்டம் நடந்து வருகிறது.
இதேவேளை அமெரிக்கா – மெக்சிகோ இடையே அமெரிக்க அரசு தடுப்புச் சுவர் எழுப்புவதற்கு மெக்சிகோ எந்த வகையிலும் உதவாது என மெக்சிகோ தெரிவித்துள்ள மெக்சிகோ ஜனாதிபதி என்ரிக் பெனா நீட்டோ , சுவர்களில் மெக்சிகோவுக்கு நம்பிக்கை இல்லை எனவும் இதற்காக மெக்சிகோ எந்தப் பணமும் தராது எனவும் தெரிவித்துள்ளார்.