159
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன
இன்றையதினம் பிரதி பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜேவர்தன மக்களை சந்தித்த பின் எழுத்து மூலமாக அளித்த உறுதிமொழிக்கமைவாகவே குறித்த உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
9ம் திகதி அலரி மாளிகையில் உண்ணாவிரதமிருந்த காணாமலாக்கப்பட்டோரின் 14 உறவினர்களும் பிரதமரைச் சந்திப்பதற்கு உறுதிமொழி வழங்கப்பட்டதை தொடர்ந்து உண்ணாவிரதம் கைவிடப்பட்டதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.
Spread the love