Home இந்தியாவிவசாயிகளின் தற்கொலை தொடர்பில் விளக்கமளிக்குமாறு இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவு

விவசாயிகளின் தற்கொலை தொடர்பில் விளக்கமளிக்குமாறு இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவு

by admin

இந்தியா முழுவதும் இடம்பெற்ற  விவசாயிகள் தற்கொலை தொடர்பாக மத்திய, மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் ரிசர்வ் வங்கி ஆகியவற்றை விளக்கமளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விவசாயிகள் தற்கொலை தொடர்பாக தன்னார்வ தொண்டு நிறுவனம்  ஒன்று தொடர்ந்த வழக்கு ஒன்று இன்று  விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்   இந்தியா  முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் நடந்ததாக கூறப்படும் விவசாயிகள் தற்கொலை சம்பவங்கள் உணர்வுபூர்வமான பிரச்சினை. இப்பிரச்சினையில், மத்திய, மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் ரிசர்வ் வங்கி ஆகியன 4 வாரங்களுக்குள் உரிய விளக்கமளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More