குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவிற்கு மே மாதம் 3ம் திகதி தண்டனை விதிக்கப்படக்கூடிய சாத்தியம் உண்டு என தெரிவிக்கப்படுகிறது.
மிஹின் லங்கா நிறுவனத்திற்காக சட்டவிரோதமான முறையில் சிங்கப்பூர் நிறுவனமொன்றுடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
883 மில்லியன் ரூபா பெறுமதியான உடன்படிக்கையொன்று சட்டவிரோதமான முறையில் கைச்சாத்திடப்பட்டதாகவும் மிஹின் லங்கா நிறுவனத்திற்கு இயந்த சாதனங்களை கொள்வனவு செய்யும் போது இவ்வாறு மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சஜின் வாஸ் மே மாதம் 3ம் திகதி வரையில் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மேலதி நீதவான் அருனி ஆட்டிகல தெரிவித்துள்ளார்.
இந்தக் கொடுக்கல் வாங்கல் இடம்பெற்ற காலத்தில் சஜின் வாஸ் குணவர்தன மிஹின் லங்கா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.