குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தேர்தலில் எந்தக் கட்சி வெற்றியீட்டினாலும் அபிவிருத்தித் திட்டங்களில் மாற்றமில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் காலங்களில் நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் தனித் தனியாக போட்டியிட்டு யார் வெற்றியீட்டினாலும், நாட்டின் அபிவிருத்தி கொள்கைகளில் மாற்றமிருக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதுராஜவல பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ள பிரதமர் நாட்டில் எந்தவொரு அரசாங்கம் ஆட்சி அமைத்தாலும் அபிவிருத்தித் திட்டங்களில் மாற்றம் செய்யப்படாது என குறிப்பிட்டுள்ளார்.