Home இலங்கைஅதிகாரத்திற்காக அன்றி நாட்டைக் கட்டியெழுப்பவே அனைவரும் ஒன்றிணைந்து போராடவேண்டியுள்ளது – ஜனாதிபதி

அதிகாரத்திற்காக அன்றி நாட்டைக் கட்டியெழுப்பவே அனைவரும் ஒன்றிணைந்து போராடவேண்டியுள்ளது – ஜனாதிபதி

by admin


அதிகாரத்திற்காக அன்றி நாட்டைக் கட்டியெழுப்பவே அனைவரும் இன்று ஒன்றிணைந்து போராடவேண்டியுள்ளது என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

அதிகாரத்தைக் கோரி சிலர் போராட்டங்களை முன்னெடுத்த போதும் 2020 க்குப் பின்னர் நடைபெறும் தேர்தலில் மக்கள் தீர்ப்புக்கு அமையவே அனைத்தும் அமையும் எனவும் அதற்கு முன்னர் அரசியல் அதிகாரம் குறித்து எவரும் நினைத்துப்பார்க்கவும் முடியாது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தேர்தல் காலத்தில் அரசியல் நோக்கங்களுக்காக போராட்டங்களை முன்னெடுத்த போதும் மக்கள் விருப்பத்தில் தெரிவான புதிய அரசாங்கம் முன்னேற்றத் திட்டங்களுடன் நாட்டை முன்கொண்டு செல்கையில் குறுகிய அரசியல் நோக்கங்களை மறந்து அந்தத் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதே நாட்டை விரும்பும் அனைத்து அரசியல்வாதிகளினதும் பொறுப்பு எனவும்  ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

மொனராகலை கும்புக்கன் ஓயா நீர்த்தேக்கத் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வில் இன்று (28) முற்பகல் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More