குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஹொரண டயர் உற்பத்திசாலை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்த உள்ளார். டயர் உற்பத்திசாலை குறித்து விசேட கலந்துரையாடல் நடத்தப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
குறித்த காணியின் பெறுமதி குறித்து மீள் மதிப்பீடு செய்யப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்தக் காணி ஒரு ஏக்கர் 100 ரூபா என்ற அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது எனினும் அவ்வாறு வழங்கப்படவில்லை என சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.
இந்த விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. ஹொரணை டயர் உற்பத்திசாலை அமைக்கும் நடவடிக்கை தற்காலிக அடிப்படையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த உற்பத்திசாலைக்கு முதலீடு செய்தவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிற்கு நெருக்கமானவர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.