Home உலகம்சிரியாவில் துருக்கி போர் விமானங்களின் குண்டுவீச்சு தொடர்கிறது – 51 ஐ.எஸ் தீவிரவாதிகள் பலி?

சிரியாவில் துருக்கி போர் விமானங்களின் குண்டுவீச்சு தொடர்கிறது – 51 ஐ.எஸ் தீவிரவாதிகள் பலி?

by admin

சிரியாவில் துருக்கி போர் விமானங்களின் குண்டுவீச்சு தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 51 ஐ.எஸ். அமைப்பினர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவில், துருக்கி எல்லையில் சில குறிப்பிட்ட பகுதிகளில் ஐ.எஸ். இயக்கத்தினர் ஆதிக்கம் செலுத்தி வருவதையடுத்து அங்கு வான்தாக்குதல் நடத்த முடிவு எடுத்த துருக்கி அரசு அல்பாப், டாதிப், கபாசின், பிஸாகா உள்ளிட்ட இடங்களில் ஐ.எஸ். இலக்குகளை குறிவைத்து போர் விமானங்கள் நேற்றுமுன்தினம் தாக்குதல்களை ஆரம்பித்தன.

இந்த தாக்குதல்களில், 24 மணி நேரத்தில்; 51 ஐஎஸ் அமைப்பினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர்களது 85 இலக்குகள் நிர்மூலம் ஆக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More