இலங்கை பிரதான செய்திகள்

சிறுபான்மை மக்களின் உரிமைகள் அரசியல் சாசனத்தின் ஊடாக உறுதி செய்யப்பட வேண்டும் – சந்திரிக்கா

குளோபல் தமிழ் செய்தியாளர்

சிறுபான்மை மக்களின் உரிமைகள் அரசியல் சாசனத்தின் உடாக உறுதி செய்யப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் ஏற்பட்ட மத ரீதியான முரண்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ள அவர் தற்போதைய அரசாங்கத்தினால் சமூக பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதுடன், பல்வேறு வேலைத்திட்டங்களும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் சாசனம் எதற்காக என்று சிலர் கேள்வி எழுப்பு வருவதாகவும், அரசியல் சாசனத்தின் மூலமே சிறுபான்மை மக்களின் உரிமைகளை பெற்றுக் கொடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.