குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மிக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
மிக் கொடுக்கல் வாங்கல்களின் போது இரகசியமான கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றுள்ளதாக அரசாங்கம் பிரச்சாரம் செய்து வருவதாகவும் யுத்த வெற்றிகளை இழிவுபடுத்தும் நோக்கில் இவ்வாறு போலிப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ள அவர் மிக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் காலத்திற்கு காலம் இவ்வாறு பிரச்சாரம் செய்யப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
பொய் ஒன்றை மீளவும் மீளவும் கூறி அதனை மக்கள் மத்தியில் உண்மையாக்க முயற்சிக்கப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.