178
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஊர்காவற்துறை அராலி சந்தியில் இன்று நடைபெற்ற வீதி விபத்தில் இளம்குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
அண்மையில் திருமணமான இளம் தம்பதிகள் ஊர்காவற்துறை பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்த போதே டிப்பருடன் விபத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
குறித்த விபத்தில் கணவர் சம்பவ இடத்திலையே மரணமடைந்தார். மனைவி படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Spread the love